பார்த்ததும் உன்மேல்
பூத்தது காதல் என்னில்
பழகாமலே ருசித்தேன்
விலகியே நடந்தேன்
விண்ணில் இருந்தே
மண்ணில் இருக்குமுனை
தொட நினைத்து
நீட்டினேன் கைகளை
முடியாமல் தவித்தேன்
சிட்டாக மாறியுனை
கட்டியணைக்க எண்ணி
சட்டென வந்தேன் மண்மீது
அருகிருந்தே உனை நான்
அளந்தேன் பார்வைகளால்
இதமாக இருந்த போதிலும்
இமைகள் படபடத்தன பயத்தில்
பூவான நான் காதலை இயம்ப
புயலாக நீ மாறி எனை காயமாக்கி
அனலான பார்வையால் எனை
தகனம் செய்துவிடுவாய் என்று
சொல்ல நினைத்த காதலை
சொல்லாமலே புதைத்தேன்
இன்றுதான் தெரிந்துகொண்டேன்
அன்று நீயும் எனைபோலவே.....
ம்ம்ம்ம்ம்...!
உன்மீதான என் காதலும்
என்மீதான உன் காதலும்
உச்சரிக்கப்படாமல் உரசாமல்
உறங்கியது மனக்கல்லறைகளில்